Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இரத்த சோகையை விரட்டும் வெல்லம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இரத்த சோகையை விரட்டும் வெல்லம் ~ (Read 367 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226716
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இரத்த சோகையை விரட்டும் வெல்லம் ~
«
on:
June 15, 2016, 10:31:07 PM »
இரத்த சோகையை விரட்டும் வெல்லம்
இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும்.
முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள். பனைவெல்லத்தைவிடவும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும் 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரும்புச் சத்தும் கால்சியமும் சேரும்போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.
தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு. பெண்களுக்கு மாதவிடாயின்போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வாதம், பித்தம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தைத் துணை மருந்தாகத் தரலாம்.
வெல்லத்தைச் சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும். ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால், வயிற்றுக் கடுப்பு கழிச்சல் தீரும். குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு உட்கொள்ளலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ இரத்த சோகையை விரட்டும் வெல்லம் ~