Author Topic: ~ மேகி போண்டா ~  (Read 337 times)

Online MysteRy

~ மேகி போண்டா ~
« on: June 15, 2016, 10:12:21 PM »
மேகி போண்டா



வெங்காயம்-1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
காரட் -1
பீன்ஸ் – 5
குட மிளகாய் – நறுக்கியது கொஞ்சம்
பச்சை பட்டாணி – கொஞ்சம்
உருளை கிழங்கு – கொஞ்சம்
எண்ணெய் – தேவையான அளவு
மேகி நூடில்ஸ் – சின்ன பாக்கெட்
கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

முதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
Step 2
வேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ மற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.
ஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.
கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம்

உப்பையும் (குறிப்பு:

 பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போடும் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.