Author Topic: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~  (Read 1087 times)

Offline MysteRy

~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« on: June 15, 2016, 09:20:40 AM »
நம்ம மொழி செம்மொழி..!!



"அம்மா".. மூன்றெழுத்து..!!
"அப்பா".. மூன்றெழுத்து..!!
"தம்பி".. மூன்றெழுத்து..!!
"தங்கை".. மூன்றெழுத்து..!!
"மகன்".. மூன்றெழுத்து..!!
"மகள்".. மூன்றெழுத்து..!!
"காதலி".. மூன்றெழுத்து..!!
"மனைவி".. மூன்றெழுத்து..!!
"தாத்தா".. மூன்றெழுத்து..!!
"பாட்டி".. மூன்றெழுத்து..!!
"பேரன்"..மூன்றெழுத்து..!!
"பேத்தி".. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
"உறவு".. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!
"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!
"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!
"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!
"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!
"வாழ்க".. "தமிழ்"...

Offline Maran

Re: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« Reply #1 on: June 17, 2016, 06:17:13 PM »


ஒரு காலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்தோம், இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கற நிலைமைக்கு ஆளாகிட்டோம்.

இத்தருணத்தில் மிக அழகாக சொன்னீங்க தோழி அதுவும் தமிழின் சிறந்த மூன்று எழுத்து வார்த்தைகளை அழகாக அடுக்கி தெளிவாக சொல்லிட்டீங்க தோழி...!!

மற்ற மொழிகளை சார்ந்து இல்லாமல், தனித்தன்மைகளுடன் மரபுவழிகளைக் கொண்டமொழி நம் தமிழ் மொழி...


கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்
கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன வாழ்க்கை எங்கள் நெறியாகும்


தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!


மாறன் என்பதும் மூன்றெழுத்து..!!  :)  ;D இதையும் சேர்த்துக்கங்க... ஹி...  :) ஹி...  :)  :)



Offline MysteRy

Re: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« Reply #2 on: June 17, 2016, 08:19:38 PM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« Reply #3 on: June 18, 2016, 11:52:32 AM »

 
 தோழியே
    தமிழ் வார்த்தைகளை
     அழகாகே
          வர்ணித்து  இருக்கேள் ....

Offline Mohamed Azam

Re: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« Reply #4 on: June 18, 2016, 12:46:28 PM »
அஷாம் என்பதும் மூன்று எழுத்துதான்
;D

Offline MysteRy

Re: ~ நம்ம மொழி செம்மொழி..!! ~
« Reply #5 on: June 18, 2016, 11:21:55 PM »