Author Topic: ~ குடமிளகாய் சட்னி ~  (Read 396 times)

Offline MysteRy

~ குடமிளகாய் சட்னி ~
« on: June 07, 2016, 11:01:47 PM »
குடமிளகாய் சட்னி



தேவையானவை:

சிவப்பு குடமிளகாய் 1 வெங்காயம் 1 தக்காளி 1 பூண்டு 2 பல் இஞ்சி 1 துண்டு புளி சிறிதளவு சிவப்பு மிளகாய் 3 உப்பு,எண்ணய் தேவையானது ——— தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு —

செய்முறை:

 சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். சிவப்பு மிளகாய், புளி இரண்டையும் தனித்தனியே எண்ணையில் வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் தேவையான உப்புடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும். கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். சிவப்பு குட மிளகாய் சட்னி இட்லி,தோசை,பொங்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற sidedish.
« Last Edit: June 07, 2016, 11:04:42 PM by MysteRy »