Author Topic: ~ பாகற்காய் பிட்ளை ~  (Read 512 times)

Offline MysteRy

~ பாகற்காய் பிட்ளை ~
« on: June 06, 2016, 11:35:53 PM »
பாகற்காய் பிட்ளை



தேவையான பொருட்கள் :

வெ.கடலை or பட்டாணி : 1 சிறிய கப் (முதல் நாள் இரவு ஊறவைக்கவும்)
புளி : 1 எலுமிச்சை அளவு
உப்பு : தேவையான அளவு
பாகற்காய் : ¼ கிலோ (ஒரு inch நீள துண்டு)
து.பருப்பு : 100 கிராம்
மஞ்சள்பொடி : 1/2 டிஸ் பூன்
கருவேப்பிலை : 2 ஆர்க்கு
கடுகு : 1 டிஸ் பூன்
எண்ணை : 2 டேபிள் ஸ்பூன்

வறுத்துபொடிக்கவும் :

மிளகாய் வற்றல் : 8 Nos.
தனியா : 1 டேபிள் ஸ்பூன்
க.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : 1 துண்டு
தேங்காய் துருவல் : 1/2 மூடி

செய்முறை :

து.பருப்பு, கடலை (or பட்டாணி) இரண்டையும் குக்கரில் மஞ்சள் பொடி சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் கொடுத்து இறக்கவும்.
புளியைக் கரைத்து அதனுடன் பாகற்காய், உப்பு சேர்த்து வேகவிடவும்.
பாகற்காய் வெந்தவுடன் வெந்த பருப்பு, வறுத்து பொடித்த பொடி சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து வந்தவுடன் இறக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.