Author Topic: ~ உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ் ~  (Read 355 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226725
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ்

சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள். ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், சருமத் துளைகளை மறைக்கலாம்.
ஐஸ்கட்டி மசாஜ் ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.



தயிர் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.
பேக்கிங் சோடா பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத் துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.
முட்டை வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸ் வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.