Author Topic: ~ தம் ஆலு! ~  (Read 617 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227453
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தம் ஆலு! ~
« on: May 16, 2016, 08:03:31 PM »
தம் ஆலு!



தேவையானவை:

 உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெ. வெங்காயம் – 3, தக்காளி – 3, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 3, எண்ணெய், உப்பு – தேவைக்கு.
பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1.
தம் ஆலு

செய்முறை:

 உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை,வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.உருளைக்கிழங்கு ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆகிவிடும் இந்த தம் ஆலு!
குறிப்பு: தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.