Author Topic: ~ ஈசி கோபி ஃப்ரை ~  (Read 322 times)

Offline MysteRy

~ ஈசி கோபி ஃப்ரை ~
« on: May 15, 2016, 08:25:50 PM »
ஈசி கோபி ஃப்ரை



தேவையான பொருட்கள்;

காளிப்ளவர் - கட் செய்த பின்பு அரைக்கிலோ
கார்ன்ஃப்லோர் -3டேபிள்ஸ்பூன்
சிக்கன் 65மசாலா- 2டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைப்பாட்டால்

காளிப்ளவரை இப்படி மெல்லிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, நறுக்கிய காளிப்ளவர் போட்டு அரைவேக்காட்டில் அடுப்பை அணைக்கவும்.

உடன் காளிப்ளவரை வடிகட்டி வைக்கவும்.

காளிப்ளவர் ஆறியவுடன் சிக்கன்65மசாலா ,கார்ன் ஃப்லோர் சேர்த்து கலந்து வைக்கவும். மசாலாவில் உப்பு இருக்கும். அதனால் உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.

குறைந்தது ஒரு அரை மணி நேரம் ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் நன்கு காய்ந்ததும் போட்டு முறுக பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சுவையான கோபி ஃப்ரை ரெடி.
இது எல்லாவகையான ரைஸ் வகைகளுடனும், ஸ்டார்ட்டராகவும் சாப்பிடலாம்