Author Topic: ~ வேப்பம்பூ ரசம் ~  (Read 311 times)

Offline MysteRy

~ வேப்பம்பூ ரசம் ~
« on: May 14, 2016, 10:42:24 PM »
வேப்பம்பூ ரசம்



தேவையான பொருட்கள்:

புளி – எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் – 3
வெந்தயப் பொடி- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தக்காளி- 2 [நன்றாக பிசைந்து கரைத்தது]
கொத்தமல்லி தழை – 1 டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
வேப்பம்பூ- 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.
அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வரும் போது அடுப்பை நிறுத்தவும்.
நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.
சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது. இதை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

மருத்துவக்குணங்கள்:

பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.
வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும்.
உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது.
தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.