Author Topic: ~ உருளைக்கிழங்கு சப்பாத்தி ~  (Read 322 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு சப்பாத்தி



தேவையானவை:

 பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.