Author Topic: ~ சீரக சப்பாத்தி ~  (Read 401 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227453
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சீரக சப்பாத்தி ~
« on: May 14, 2016, 10:33:48 PM »
சீரக சப்பாத்தி



தேவையானவை:

 கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

 மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்