Author Topic: ~ சேனைக்கிழங்கு சோயா புலாவ் ~  (Read 457 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226688
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சேனைக்கிழங்கு சோயா புலாவ்

சேனைக்கிழங்கு – 1/4 கிலோ,
வெங்காயம் – 2,
பூண்டு – 2 பல்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி – 1 கைப்பிடி,
புதினா – 1 கைப்பிடி,
பாஸ்மதி அரிசி -1 1/2 கப்,
சோயா சங்க்ஸ் – 50 கிராம்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு, கிராம்பு – 1 டீஸ்பூன்,
பட்டை – 1,
முந்திரி – 8.



சோயா சங்ஸ்ஸை சுடுதண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,  கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை  தாளிக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து லேசாக வதக்கவும்.  பின் அரிசி கழுவிப் போட்டு வதக்கவும். சோயாவை சேர்க்கவும். 1க்கு 2 தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். பிறகு முந்திரி  வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.