Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு ! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு ! ~ (Read 695 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226725
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு ! ~
«
on:
May 14, 2016, 09:57:43 PM »
தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு !
25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளுவிதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு, களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொளுத்தவன், கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழமொழிகள் மூலம் மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப் பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும்
சிலர் கூறுகின்றனர்.
கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:
கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப் புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு ! ~