Author Topic: ~ பருப்பு-தக்காளி தோசை ~  (Read 307 times)

Offline MysteRy

பருப்பு-தக்காளி தோசை



தேவையானவை:

புழுங்கலரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
தக்காளி – 4
உப்பு -தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள்
அரைத்த மாவை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவையுங்கள்.சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.