Author Topic: ~ பன்னீர் காளான் சாண்ட்விச் ~  (Read 636 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227457
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பன்னீர் காளான் சாண்ட்விச்



தேவையான பொருள்கள்:

பிரட் -10 துண்டு
காளான் – 200 கிராம்
பன்னீர் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கிராம்பு – 3
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், மற்றும் கிராம்பு போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். காளான், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி, பன்னீரை துருவிக் கொள்ளவும்
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பன்னீர் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து இறக்க வேண்டும்.
பின்பு பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து, மற்றோரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.