Author Topic: ~ வெள்ளையான சருமம் வேண்டுமா அப்ப இத படிங்க ~  (Read 353 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227495
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெள்ளையான சருமம் வேண்டுமா அப்ப இத படிங்க

சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம்.



இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும்.
அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும். எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!