கற்று கொடுக்க கவிதை
ஒன்றும் கல்வி பாடம் இல்லையடி
கள்ளூறும் கவின்மலரே !
கட்டிபோட்டிருக்கும் கற்பனைகுதிரைகளை
கட்டவிழ்துவிடவேண்டும்
கொஞ்சம் ,கொஞ்சும் தமிழ்
ஆர்வம் கொஞ்சமே இருந்தாலும் போதும்
படி படியாய் விடா முயற்சி செய்தால்
என் போல் போலி கவிஞனாய் ஆகாமல்
கொஞ்சும் கவிதாயினி ஆகலாம் !