Author Topic: கடலும் கன்னியரும்  (Read 463 times)

Offline thamilan

கடலும் கன்னியரும்
« on: May 09, 2016, 11:09:35 PM »
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
குதுகலிக்கும் கன்னியர்கள்
கன்னியரை கண்டதால்
கடலைகள் ஆர்ப்பரிகிறதா
கடலலைகளை கண்டதால்
கன்னியர்கள் ஆர்ப்பரிக்கிரார்களா
புரியவில்லை எனக்கு

கடலும் கன்னியரும்
ஒன்று தானே
ஆழமறிய முடியாத
ஆளையே விழுங்கிடும்
இரு வேறு படைப்புகளே
கடலும் கன்னியர்களும்

கோபம் வந்தால்
கடலைகளைப் போல
கொந்தளிப்பது பெண்களும் தானே

பாய்ந்து வந்து
காலைத் தழுவி காதலை சொல்லும்
கடலலைகள்
பெண்களைக் கண்டால்
ஆண்களுக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் காதல் வரும் 

Offline SweeTie

Re: கடலும் கன்னியரும்
« Reply #1 on: June 08, 2016, 12:30:52 AM »
ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஒர வஞ்சனை??....  கடலுக்கு  சமமாக கன்னியரை படைத்தவன்  ஆணுக்கு சமமாக எதைப் படைத்தான்?
 வாழ்த்துகள்