Author Topic: ~ மீன் தவா 65 ~  (Read 426 times)

Offline MysteRy

~ மீன் தவா 65 ~
« on: May 08, 2016, 10:12:23 PM »
மீன் தவா 65



தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
தனியாதூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
முட்டை – ஒன்று (வெள்ளை கருவு)
பாரை மீன் – பத்து துண்டு (முள் நீக்கிய துண்டுகள்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கருப்பு மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, லெமன் ஜூஸ், உப்பு, முட்டை வெள்ளை கருவு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு பாறை மீன் போட்டு அரை மணி நேரம் ஊறவைகவும்.
பின் குச்சியில் மீனை சொருகி தவாவில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.