உள்ளுக்குள் இருந்து உயிர்வதம் செய்யும்
உயிருக்கு உயிரானவளே
காதலில் ஏற்பட்ட காயத்தால்
நான் இன்று கவிஞன்
கவிதை என்று சொல்லும்போதெல்லாம்
கருவாக வந்தவள் நீயே
உன் இதயத்தை கொடுக்காமல்
என் இதயத்தை
எடுத்துக் கொண்டவள் - நீ
புன்னகையில் வென்று
இதயத்தை கொன்று
நடத்திய வேள்வியில் கிடைத்தது
தோல்வி ஒன்றே
கேட்கிறேன் ஓர் கேள்வி!
காதல் பொய்யா
நீ காதலித்தது பொய்யா
என் கண்ணீர் ஒன்றே
உண்மை
என் கற்பனை யிலும் - நீ
கருவாக கவிதைகளாக - நீ
பிரிந்தாலும் என் பேனா அழுகிறது
உன்னை எண்ணி
நீ எழுதிய கடிதங்களை
தீயிலிட்டேன்
தீயிலிட்ட கடிதங்களை
திடீரென அணைத்து விட்டேன்
எரிகிற நெருப்பில் தெரிந்தது
உன் முகம்
கேட்டது உன் குரல்
உன்னால் காதலை அழிக்க முடிந்தது
என்னால்
உனது கடிதத்தைக் கூட
அழிக்க முடியவில்லை
கல்லறைக்கு போகும் வரை
தீராது என் கண்ணீர் கவிதைகள்
கல்லறையிலும் பூக்கும்
கல்லறைப் பூக்களாக
என் கவிதை பூக்கள்