Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம் ~ (Read 415 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226725
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம் ~
«
on:
May 05, 2016, 10:40:26 PM »
நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம்
சித்த மருத்துவத்தில் நோயை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய பல வகையான மூலிகை சாறுகளை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
பப்பாளி இலை சாறு
பப்பாளி இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். இதன் இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.
தயாரிக்கும் முறை:-
புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும்.
நிலவேம்பு குடிநீர்
நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரஸை அழித்துவிடும். இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும் இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.
தயாரிக்கு முறை:-
நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.
வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம்.
மலைவேம்பு இலைச்சாறு
மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரஸை எதிர்க்கும் சக்தி கொண்டது.
தயாரிக்கும் முறை:-
புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும்.
Logged
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம் ~