Author Topic: ~ பொரித்த சிக்கன் ~  (Read 821 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226676
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பொரித்த சிக்கன் ~
« on: May 02, 2016, 11:00:04 PM »
பொரித்த சிக்கன்



சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா தூள் – 1 மேசைக்கரண்டி
ஓமம் (oregano) – சிறிது (விரும்பினால்)
கார்ன் ஃபிளார் – 2 மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு

எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு, தயிர், வினிகர், உப்பு போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் அதில் தந்தூரி மசாலா பவுடர், மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
அதனுடன் கார்ன் ஃபிளார் மற்றும் முட்டை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
கடைசியாக ஆரிகானோ சேர்க்கவும்.
மிதமான தீயில் பொரித்து பொரித்து எடுக்கவும்.
சுவையான பொரித்த தந்தூரி சிக்கன் தயார்.