Author Topic: ~ ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ~  (Read 390 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227456
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி



தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1/2 கப் (நறுக்கியது)
பாசிப்பருப்பு – 1/4 கப்
வரமிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
வெல்லம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும்.
பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி!!!