Author Topic: ~ முட்டைக்கோஸ் பொரியல் ~  (Read 376 times)

Offline MysteRy

முட்டைக்கோஸ் பொரியல்



தேவையானவை:

பெரிய முட்டைக்கோஸ்- 1
தேங்காய்- 2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- 4 இலைகள்

செய்முறை:

1. கோஸை அலம்பிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிசப்பொருட்களை எண்ணெய் கொதித்ததும் இட்டு சிவக்க வதக்கவும்.
3. நறுக்கின கோஸைப் போட்டு தண்ணீர் தெளித்தோ சிறிதளவோ விட வேண்டும்(அதிகம் என்றால் குழையும், தண்ணீரே இல்லை என்றால் அடிப் பிடிக்கும்)
4. உப்பு, மஞ்சள் தூள் இட்டு மிதமான தீயில் வாணலியை மூடி விடவும்.
5. அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
6. வெந்த பிறகு பச்சைத்தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலையையும் போட்டு ஒன்று சேர்த்து அலங்கரிக்கவும்.
முட்டைக்கோஸின் நன்மைகள்:
உடல் இளைக்க உதவும் காய்களில் மிக முக்கியமானது முட்டைக்கோஸ்.உடலில் இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.
‘கிரேக்க வயாகரா’ என்று அழைக்கப்படும் கோஸ் ஆண்களின் தாது விருத்திக்கு உதவுகிறது.
முட்டைக்கோஸில் விட்டமின்கள் A,C, மற்றும் E இருக்கின்றன. இவற்றைத் தவிர நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் சத்தும் இருக்கின்றன.
முட்டைக்கோசின் தனித் தன்மையான வாசனைக்குக் காரணம் அதில் இருக்கும் சல்பர். இந்த சல்பர் சத்து கிருமிகளுடன் போராடவும், திசுக்களைக் காக்கவும் பயன்படுகின்றன.
இதில் இருக்கும் வைட்டமின்கள் A மற்றும் E ஆரோக்கியமான சருமத்தையும் கண்களையும் பளபளப்பான கூந்தலையும் கொடுக்கின்றன.
விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது; இதில் இருக்கும் நார் சத்தும் இரும்புச் சத்தும் நம் செரிமான உறுப்புகளை காக்கிறது.
இன்றைய அறிவியல் வல்லுனர்கள் முட்டை கோஸ் ஒரு விதமான புற்று நோய் வராமல் தடுக்கவும், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது என்கிறார்கள்.
உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இதன் குறைந்த கலோரிகளுக்காக இதனைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஒரு கோப்பை கோஸில் 15 கலோரிகள் தான் இருக்கிறது. உடலில் இருக்கும் கொழுப்பு குறையவும், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு குறையவும் கோஸ் ஒரு அரு மருந்து. அரைக் கோப்பை பச்சைக் கோசில் 10 கலோரிகளே உள்ளது.
பழைய காலத்தில் கேபேஜ் ரசத்தை வயிறு மற்றும் குடல் புண்களுக்கு மருந்தாக குடித்து வந்தனர். சருமத்தில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கக் கோஸ் இலைகளை பச்சையாக அரைத்து பூசி வந்தனர். இதன் இலைகளை எரித்து அந்தச் சாம்பலைக் காயங்களுக்கு வெளியே பூசும் கிருமி நாசினியாக பயன்படுத்தினர்.
மிகுந்த நன்மைகள் அளிக்கும் கோஸைப் பொரியல், கூட்டு, குழம்பில் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சாலட்டாகவும் உண்ணலாம்.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கோஸைத் தவிர்க்க வேண்டு