Author Topic: ~ தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ~  (Read 371 times)

Online MysteRy

தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி



தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 1/4 கப்
முந்திரி – தேவையான அளவு
நெய் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்

செய்முறை :

* வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்தவுடன் அதில் சிறிது பாலை ஊற்றினால் சர்க்கரையில் உள்ள அழுக்குகள் மேலே வரும். இப்போது அழுக்கை வடிகட்டி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து, கம்பி பதம் வந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து விடவும்.
* நெய் தடவிய தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால் சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி!!!