Author Topic: ~ வெங்காய இறால் ~  (Read 370 times)

Online MysteRy

~ வெங்காய இறால் ~
« on: May 02, 2016, 03:52:41 PM »
வெங்காய இறால்



இறால் – கால் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
பட்டை – ஒன்று
எண்ணெய் – சாதாரண எண்ணெய் (அ) ஆலிவ் – ஐந்து தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிது
பச்சைமிளகாய் – இரண்டு

இறாலை முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கெடுத்து சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பெரிய வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு தீயை சிம்மில் வைத்து கருகாமல் நன்கு வேகவிடவும்.
வெங்காயம் நன்கு சிவக்காமல் வதங்க வேண்டும்.
வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகிறவரை கிளறி கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாயை சேர்க்கவும்.
பிறகு இறாலை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளியையும் சேர்த்து கிளறி சிம்மில் விடவும். அப்படியே கூட்டு மாதிரி வரும்.
இதற்கு எண்ணெய் அதிகமாக ஊற்றினால் தான் நல்லா இருக்கும்.