Author Topic: ~ முருங்கை புளிக்குழம்பு ~  (Read 444 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முருங்கை புளிக்குழம்பு



சின்ன வெங்காயம் – 100 கிராம்
முழு பூண்டு – ஒன்று
தக்காளி – மூன்று
உருளை – ஒன்று
முருங்கைக்காய் – இரண்டு
புளி – (இரண்டு எலுமிச்சை அளவு) தேவையான அளவு
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு குழிக்கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது

புளியை ஊற வைத்து அதனுடன் தக்காளியை கரைத்து வைக்கவும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைக்கவும். உருளையை துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முருங்கை, உருளை எல்லாவற்றையும் சேர்க்கவும்.
நன்றாக கிளறி விட்டு மிளகாய் தூள் காரம் போகும் வரை கொதிக்க விடவும்.
குழம்பின் மேலே எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
சாதத்துடன் போட்டு சாப்பிட சூடான, சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெடி