Author Topic: ~ போகா - பழ லட்டு!!! ~  (Read 362 times)

Offline MysteRy

~ போகா - பழ லட்டு!!! ~
« on: May 01, 2016, 10:32:00 PM »
போகா - பழ லட்டு!!!



தேவை?

அவல் - 1/4 கப்,
பேரீச்சம்பழம் - 5,
வெல்லம் - 1/4 கப்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பாதாம் - 6,
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அவலை தண்ணீரில் அலசிக் கழுவவும். அத்துடன் நறுக்கிய பேரீச்சம்பழம், பொடித்த பாதாம் பருப்பு, வெல்லம், ஏலக்காய்த் தூள், துருவிய தேங்காய் சேர்த்து உருண்டையாகப் பிடிக்கவும்.

ரத்த உற்பத்தியை மேம்படுத்தும். ரத்த சோகையில் இருந்து விடுவிக்கும். எளிதில் ஜீரணமாகும் உணவு.