Author Topic: ~ உங்கள் கனவில் பாம்பு வந்தால் அப்போ இதெல்லாம் நடக்கும் ~  (Read 1048 times)

Offline MysteRy

உங்கள் கனவில் பாம்பு வந்தால் அப்போ இதெல்லாம் நடக்கும்

பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்



1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
யானை துரத்துவது போல கனவு வருது அதுக்கு பலன்  இருந்தால்
 சொல்லுங்க நண்பர்களே ...... :( :( :(
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline MysteRy