Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி ~ (Read 388 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225069
Total likes: 28363
Total likes: 28363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி ~
«
on:
April 29, 2016, 09:57:56 PM »
சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
எலும்பு நீக்கிய கோழிக்கறி – 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன் ப்ளவர் – 6 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
குடை மிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
வெங்காயத்தாள் – சிறிதளவு
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ – கால் தேக்கரண்டி
வினிகர் – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
* கோழிக்கறியை கழுவி சுத்தம் செய்து விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அகலமான பாத்திரத்தில் 5 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிக்கனை சேர்ந்து மறுபடியும் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு பாதியளவு வேகும்படி பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
* குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* வெங்காயத் தாளை நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
* மீதமுள்ள கார்ன் ப்ளவரை முக்கால் கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்கிய பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.
* பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன் ப்ளவர் கலவையை ஊற்றிக் குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும்.
* பின்னர் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
* இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.
* சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி ~