Author Topic: கோடை விடுமுறை  (Read 570 times)

Offline vaseegaran

கோடை விடுமுறை
« on: April 28, 2016, 03:01:14 PM »
சிக்கன் பப்ஸ்
சாப்பிட்டிருக்கியா!
வெல்லம் போட்ட
கச்சாயம் தின்னிருக்கியா!

எங்க வீட்டுப் பக்கம்
’பிக் சிக்’ இருக்கு!
எங்க வீட்ல
நாட்டுக்கோழி இருக்கு!

அங்கே மேரிப்ரவுன் கூட
இருக்குதே!
எங்க அப்பத்தா
கல்லக்கா சுட்டுத்தருமே!

குஷி ரைட்
செமையா இருக்குமே!
ஆலமரத்துல
தூரி ஆடியிருக்கியா!

சம்மர்க்கு
தீம்பார்க் போவோமே!
மொட்டக் கெணத்துல
நீச்சலடிப்போமே!

ஷாப்பிங் போவோம்
தெரியுமா!
சந்தைக்கு போவோம்
தெரியுமா!

எங்க வீட்ல
ஃப்ரிட்ஜ் இருக்கு!
எங்கூட்ல
புதுப் பானையிருக்கு!

வெஜிடபுள்ஸ்க்கு கூட
ஏசி மார்ட்தான்!
நாங்க காட்டுலயே
பொறிச்சுக்குவோம்

நூடுல்ஸ் எனக்கு
ரொம்பப் பிடிக்கும்!
பழம் சக்கரை போட்ட
சந்தவை ரொம்பப் பிடிக்கும்!

அப்பா பீட்சா
வாங்கிட்டு வருவாரே!
காடை முட்டை சாணி உருண்டையில
சுட்டு திம்பமே!

எங்க வீட்டுல
பொமரேனியன் டாக் இருக்கே!
எங்க வீட்டுல
ரெண்டு எருமை இருக்கே!

ஸ்விம்மிங் கிளாஸ்
போலாம்னு இருக்கேன்
வாய்க்கால்ல
சம்மர் சாட் அடிப்பனே!

நகரத்து மயிலுக்கும்
கிராமத்து குயிலுக்கும் நடந்த
நிதர்சன வாள் வீச்சுகளில்
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தேன்!

வெற்றி தோல்வி தரவல்லாத
மொண்ணை ஆயுதங்கள்
தாங்கியவனாய்!

- Erode Kathir

Offline Maran

Re: கோடை விடுமுறை
« Reply #1 on: April 30, 2016, 03:49:38 AM »


கவிதையை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி... வசீகரன் நண்பா!

அழகான சிந்தனை, அழகான கவிதை, ஒப்பீடு நிதர்சனத்தைக் காட்டுகின்றது. அருமை

கவிஞர் கதிர் அவர்கள் நிகழ்காலத்தை அப்படியே காட்டிவிட்டார்.  ஆனால் கிராமங்கள் கூட இப்போ மாறி வருகிறது. பெண்களிடம் உடைமாற்றம், ஆண்களிடம் உடைமாற்றம் என்பது மட்டுமல்ல.  உணவு முறையும் மாறி வருகிறது.


விடுமுறை நாட்களில் பள்ளிபருவத்தில் கிணற்றில் குளித்த கிராமத்து வாழ்க்கை இப்போது நகரத்து ஷவரில் குளிக்கும்போது கிடைப்பதில்லை. இன்னும் சிறுவயதில் என் தாத்தா கையைப் பிடித்து ஊரை சுற்றிவந்த நினைவுகளின் சுகமும் மறக்கவில்லை, கிராமத்து சுதந்திரத்தின் மகிழ்ச்சி, போலி இல்லாத எதார்த்த வாழ்க்கை இன்னும் மனதில் நிழல் ஆடுகிறது. 




நகரத்து மயிலுக்கும்
கிராமத்து குயிலுக்கும் நடந்த
நிதர்சன வாள் வீச்சுகளில்
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தேன்!

வெற்றி தோல்வி தரவல்லாத
மொண்ணை ஆயுதங்கள்
தாங்கியவனாய்!

- Erode Kathir


உண்மையான வரிகள்..! நகரத்து மாணவனை நேருக்கு நேர் சந்திக்கும் கிராமத்து மாணவனின் எதார்த்த மன நிலையின் பிரதிபலிப்பு.