Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் கட்லெட் செய்வது எப்படி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிக்கன் கட்லெட் செய்வது எப்படி ~ (Read 375 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225069
Total likes: 28363
Total likes: 28363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிக்கன் கட்லெட் செய்வது எப்படி ~
«
on:
April 27, 2016, 10:11:15 PM »
சிக்கன் கட்லெட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
சிக்கன் (எலும்பில்லாதது) – 500 கிராம்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 7
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறிய துண்டு
சோம்புத் தூள் – 1½ தேக்கரண்டி
மிளகு தூள் – 1½ தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 3
முட்டை – 2
பிரட் தூள் – 1 கப்
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
* உருளை கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* எலும்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு சிக்கனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் வேக வைக்கவும். சிக்கனில் உள்ள நீர் வெளியேறும் வரை வேக வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு கலவையை சேர்க்கவும்.
* அவை நன்கு வதங்கியதும் சோம்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வேக வைத்த சிக்கனை சேர்த்து சிக்கன் இழையாக வருமாறு 15 – 20 நிமிடம் நன்றாக வதக்கிய பின் இறக்கி ஆற விடவும்.
* சிக்கன் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு கிளறவும்.
* பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உங்களுக்கு வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்
* ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கவும்.
* ஒரு தட்டில் பிரட் தூளை கொட்டி வைக்கவும்.
* பின்பு செய்து வைத்துள்ள கட்லெட்களை முட்டையில் முக்கி எடுத்து பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து பின்பு அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
* சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ சிக்கன் கட்லெட் செய்வது எப்படி ~