Author Topic: ~ தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்! ~  (Read 426 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226725
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்!



தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

100 கிராம் சப்போட்டாவில்அடங்கியுள்ள சத்துக்கள்
புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம், கரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின்0.02 மில்லி கிராம் மற்றும் விட்டமின் சி 6.1 மில்லிகிராம் உள்ளது.
மருத்துவ பயன்கள்
சப்போட்டாபழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி,கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகள்வலுவடையும்
இரவில்உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம்.
பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக்,என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம்.
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்குஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு
உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.