Author Topic: ~ பஜ்ஜி போண்டா ~  (Read 573 times)

Offline MysteRy

~ பஜ்ஜி போண்டா ~
« on: April 27, 2016, 09:36:49 PM »
பஜ்ஜி போண்டா



தேவையானவை:

கடலைப்பருப்பு – 500 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 5
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி – போண்டா ரெடி மிக்ஸ்.
பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
போண்டா என்றால்… நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.