Author Topic: ~ கறிவேப்பிலை கோழி ~  (Read 418 times)

Offline MysteRy

~ கறிவேப்பிலை கோழி ~
« on: April 26, 2016, 11:09:12 PM »
கறிவேப்பிலை கோழி



தேவையானவை:

சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கொத்தமல்லித்தூள் (தனியாத்தூள் ) - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

சிக்க‌னை சுத்தம் செய்து நறுக்கி இஞ்சி - பூண்டு விழுது,மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து ஊறவைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தேவையானவற்றில் மீதும் இருக்கும் பொருள்களில் எலுமிச்சை தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் வதக்கி ,சூடு ஆறியதும் பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும்.பின் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.