Author Topic: ~ சத்தான கோதுமை ரவை இட்லி ~  (Read 371 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226284
  • Total likes: 28769
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சத்தான கோதுமை ரவை இட்லி



தேவையான பொருள்கள் :

கோதுமை உடைத்த ரவை – 2 கப்
உளுத்தம் மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தயிர் – அரை கப்
துருவிய கேரட் – கால் கப்

தாளிக்க :

கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

* முதலில் கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, தயிர், துருவிய கேரட், உளுந்து மாவு, உப்பு சேர்த்து கரைத்து 4 முதல் 5 மணிநேரம் புளிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* நன்றாக புளித்த பிறகு இட்லிகளாக ஊற்றி சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
* இப்பொழுது சுவையான கோதுமை ரவை இட்லி ரெடி.