Author Topic: ~ கோக்கனட் குக்கீஸ் ~  (Read 422 times)

Offline MysteRy

~ கோக்கனட் குக்கீஸ் ~
« on: April 25, 2016, 08:20:55 PM »
கோக்கனட் குக்கீஸ்



தேவையான பொருட்கள் :

செல்ஃப் ரெய்சிங் மாவு /மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – அரை கப்
முட்டை – ஒன்று
தேங்காய் துருவல் – அரை கப்
தேங்காய் பால் – 2 (அ) 3 தேக்கரண்டி
மார்ஜரின் (Margarine) – 100 கிராம்

செய்முறை :

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
மார்ஜரினுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையைத் தனியாக அடித்து, மார்ஜரின், சர்க்கரை கலவையுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும்.
அதனுடன் தேங்காய் பால் சேர்த்து, சிறிது சிறிதாக மாவையும் சேர்த்துப் பிசையவும்.
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிசையவும்.
மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
பிறகு மாவை சப்பாத்தியை விட சற்று தடிமனாக தேய்க்கவும். விரும்பிய வடிவ குக்கி கட்டரால் வெட்டியெடுத்து, ட்ரேயில் அடுக்கி மைக்ரோவேவில் வைத்து மீடியம் ஹையில் 3 அல்லது 4 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான கோக்கனட் குக்கீஸ் ரெடி.