Author Topic: ~ கலகலா ~  (Read 323 times)

Offline MysteRy

~ கலகலா ~
« on: April 25, 2016, 08:17:04 PM »
கலகலா



தேவையான பொருட்கள்

மைதா – இரண்டு கப்
நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
முட்டை – ஒன்று
சோடா பைகார்ப் – கால் தேகரண்டி
தேங்காய் பால் – அரை கப்
சக்கரை – மூன்று டேபிள்ஸ்பூன்
நெய் தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அதன் மேல் நெய், அடித்த முட்டையை சேர்த்து கலக்கவும்.
சோடாபைகார்ப், தேங்காய் பால், சக்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிருதுவாக மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக செய்து நாப்பது நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சோழி மாதிரி செய்து அதன் மீது முள்கரண்டியால் அழுத்தி குத்தி விட்டு கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக வரும் வரை கலகலாவை பொரித்து எடுக்கவும்.
காற்று போகாத பத்திரத்தில் போட்டு வைக்கவும்.