Author Topic: ~ வடு மாங்கா ஊறுகாய் ~  (Read 393 times)

Offline MysteRy

~ வடு மாங்கா ஊறுகாய் ~
« on: April 24, 2016, 09:27:46 PM »
வடு மாங்கா ஊறுகாய்

தேவையான பொருட்கள்

பிஞ்சு மாங்காய்கள் — ஒரு கிலோ
மிளகாய்ப்பொடி — 50 கிராம்
கடுகு பொடி — 25 கிராம்
நல்லெண்ணை — 4 ஸ்பூன்
உப்பு — தேவையான அளவு



செய்முறை

மாங்காய்களை காம்பு நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.
நல்லெண்ணையை பிரட்டி, கடுகுத்தூள்,மிளகாய்த்தூள், உப்புமேலாக பரவலாகப்போட்டு காற்றுப்புகாமல் மூடி வைக்கவும்.
தினசரி ஒருமுறை குலுக்கி விடவும்.
நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.