Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 31602 times)

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #90 on: January 21, 2012, 03:42:39 PM »
படம்: வி.ஐ.பி
இசை: ரஞ்சித் பரோத்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

 



மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
(மின்னல் ஒரு கோடி..)

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே

மழையில் நனையும் பனி மலராய் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி..)

 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #91 on: January 21, 2012, 03:43:32 PM »
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு

அஞ்சு மணி மஞசள் வானத்தைப்பார்த்தா
நெஞ்சுகுள்ளே சுகம் நெளியுது காத்தா

ஒன்னுகொன்னா உடல் ஒரசனும் கூத்தா
ஒத்துகிட்டா பொன்னு உன்ன விடமாட்டா

பாடி பார்க்கும் மனசு
தொட தேடி துடிக்கும் வயசு

வயக்காடு மச்சினன் வயக்காடு ஹோ
மடியோடு மடக்கி நீ போடு

சிக்கு சிக்கு சின்ன பொன்னு
எக்கச்சக்க கற்பணையில்
வைக்க வந்தா முத்தம் வைக்க வந்தா

கொக்கு கொக்கு சாமகொக்கு
கொத்துகிற வித்தையிலெயே சிக்கி கிட்டா
தண்ணில் விக்கி கிட்டா

ஆடி ரெட்ட குடில் பாட்டு
வட்டி முதல் கெட்டு ஒட்டி உறவாடலாம்

தொட்ட இடம் பூக்கும்
மொத்த இடம் வெர்க்க
கட்டில் திரை பொடா வா

ஹேஎ சொல்ல சொல்ல மனம் இனிக்குது தேனா
சுந்தரியே இனி உன்ன விடுவேனா

மல்லியப்பூ வைக்க மறப்பவள நானா
சொன்னப்படி இனி திறக்குமே தானா

சோலைவனத்து கரும்பே ஹே
ஆடி சேலை கொடியில் அள்ளுவேன்

வயக்காடு மச்சினன் வயக்காடு

மடியோடு மடக்கி நீ போடு

மொட்டு மொட்டு முல்லை மொட்டு
முன்னும் பின்னும் மெல்ல தட்டு
வட்டமிடு என்னை வட்டமிடு

ஆஹா தட்டு தட்டு தங்கதட்டு
தட்டு மேல பூந்தி லட்டு
புட்டு கொடு கொஞ்சம் புட்டு கொடு

ஆஹா உன்ன அழுக்காம
ஒன்ன இருக்காம
உள்ளம் கெடக்குது வெளியே

ஆஹா கண்ணில் இடம் கேட்டு
கண்ணி வெடி போட்டு
என்ன நடத்து கிளியே

ஓஒ கத்திரிபூ இத காதுல வாங்கி
சுத்துதய்யா அந்த சுகத்துக்கு ஏங்கி

ஆஹா முப்பது நாலும் மடியில தூங்கி
முதமிடு என்ன மனசுல தாங்கி

சோளம் வெளஞ்சு கெடக்கு
ஒரு ஜோடி அதுக்கு இருக்கு

வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு

ஓஓ அஞ்சு மணி மஞசள் வானத்தைப்பார்த்தா
நெஞ்சுகுள்ளே கொஞ்சம் நெளியுது காத்தா

ஒன்னுகொன்னா உடல் ஒரசனும் கூத்தா
ஒத்துகிட்டா பொன்னு உன்ன விடமாட்டா
பாடி பார்க்கும் மனசு
தொட தேடி துடிக்கும் வயசு

வயக்காடு மச்சினன் வயக்காடு

மடியோடு மடக்கி நீ போடு
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #92 on: January 21, 2012, 03:46:00 PM »
படம்: வெற்றிவிழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)

கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
(மாருகோ..)

சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய்
ஹேய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா
ஏய் கும்மா கும்மா அடி எம்மா எம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா
ஆசையாக பேசினால் போததும்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகதும்மா
ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா
ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது
(மாருகோ..)

நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேளி கட்டு
என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாக காது கடி
என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இன்னேரம் கண்டு பிடி
கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து
காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையை தீர்த்துக்கோ..
(மாருகோ..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #93 on: January 21, 2012, 03:46:44 PM »
படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: சித்ரா



விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உளருதே
நான் என்னைக் காணாமல்
தினம் உன்னைத் தேடினேன்
என் கண்ணீர்த் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
(விழியிலே..)

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
(விழியிலே..)

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனித்திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நான் காதல் பொம்மையா ஹோ..
(விழியிலே..)



 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #94 on: January 21, 2012, 03:47:21 PM »
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா
படம்: வசந்தி


ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதி தேவி வடிவான சிலையோ
அஹஹா

கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ
கரை போட்டு நடக்காத நதியோ
ஓஓஓஓ
ம்ம்ம்ம்
[ரவிவர்மன்...]

விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
[ரவிவர்மன்...]

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
[ரவிவர்மன்...]

                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #95 on: January 21, 2012, 03:48:12 PM »
படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
பாடியவர்: M.G.ஸ்ரீகுமார், சித்ரா




சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டு வைத்து
பவழப்பட்டும் கட்டி
அருகில் நிற்கும் உன்னை
வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா

(சுட்டும் சுடர்விழி)

உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்(2)
உன் சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே ப்ரியமே சகி

சுட்டும் சுடர்விழி நாள்முழுதும் தூங்கலையே கண்ணா
தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

இருவிழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
உள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்
விண்ணுலகம் எரியுதே பெளர்ணமி தாங்குமா
இங்கு எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ
கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

(சுட்டும் சுடர்விழி பார்வையிலே)




 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #96 on: January 21, 2012, 03:49:23 PM »
படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா



உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
(உன் பார்வையில்)



 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #97 on: January 21, 2012, 03:50:53 PM »
படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா


அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே

(அழகு...)

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

(அழகு...)

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே

(அழகு...)



                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #98 on: January 21, 2012, 03:52:02 PM »
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இதம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இடம் தரும்
(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்
(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்
(காதல்..)


 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #99 on: January 21, 2012, 03:58:06 PM »
படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து


சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே..)

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
(கண்ணாளனே..)

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நான்ல்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
(கண்ணாளனே..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #100 on: January 21, 2012, 04:00:19 PM »
படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், சித்ரா





ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு

(ஒரு கிளியின் தனிமையிலே)

பெண்: முத்து ரத்தினம் உனக்கு சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்

(ஒரு கிளியின் தனிமையிலே)

ஆண்: கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்

பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்

ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை

பெண்: கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை

ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்

(ஒரு கிளியின் தனிமையிலே)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #101 on: January 21, 2012, 04:01:03 PM »
படம்: மஹாநதி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா



பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
(தைப்பொங்கலும்..)

முப்பாட்டன் காலம் தொட்டு
முப்பாகம் யாரால?
கல்மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோடு சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோட சேதி சொல்ல
காத்து வராதா?
செவ்வாழ செங்கரும்பு
சாதிமல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்கு
ஏதுமில்ல வாட்டம்தான்
நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
(தைப்பொங்கலும்...)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #102 on: January 21, 2012, 04:01:49 PM »
படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #103 on: January 21, 2012, 04:02:40 PM »
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா


நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #104 on: January 21, 2012, 04:03:33 PM »

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து



என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
(என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)