Author Topic: ~ பீட்ரூட் பொரியல் ~  (Read 329 times)

Offline MysteRy

~ பீட்ரூட் பொரியல் ~
« on: April 23, 2016, 09:37:23 PM »
பீட்ரூட் பொரியல்

தேவையானவை:

பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று,

பச்சை மிளகாய் – 2

சர்க்கரை – 2 டீஸ்பூன்,

கடுகு, உளுத்தம்பருப்பு,

காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு.



செய்முறை:

பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில்  கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.

இந்தப் பொரியல்… சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.