Author Topic: ~ மீன் புளி வறுவல் ~  (Read 319 times)

Offline MysteRy

~ மீன் புளி வறுவல் ~
« on: April 23, 2016, 09:30:30 PM »
மீன் புளி வறுவல்



மீன் – 7 அல்லது 8 துண்டுகள்
65 பொடி – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
புளித் தண்ணீர் – 3 தேக்கரண்டி
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

ஒரு தட்டில் 65 பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு கலந்து கொள்ளவும்.
அதனுடன் பூண்டு விழுது சேர்த்து பிசைந்து தேவைக்கேற்ப புளித் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
அதில் மீன் துண்டுகளை போட்டு முழுவதும் தடவி விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும்.
தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்.
சுவையான மீன் புளி வறுவல் தயார்.