Author Topic: ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து  (Read 3578 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ



தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும். வாயுவின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால், வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாயு சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர் பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாயு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.

மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால், ரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, ஜுரம், மயக்கம், பசியின்மை, மஞ்சள் பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும்.

கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய் பசையுடன், ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும், நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது, ஜுரம், வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.

மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாயுவை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும், பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். 'தக்ரப்ரயோகம்' எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை, நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு, நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்றில் வாயு, கபம் இரண்டையும் போக்குகிறது.

இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால், இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே, மோரைப் பருக வேண்டும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்