Author Topic: ~ எந்தெந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்? ~  (Read 337 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226726
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எந்தெந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்?

பொதுவாக, சமைத்த உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கும். இதுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறது.



எனவேதான், ‘தினமும் கார்போஹைட்ரேட்நிறைந்த உணவுகளை 55 – 65 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமைத்த உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். செரிமானத்துக்கு ஏற்றது. குறிப்பாக, எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நன்றாகச் சமைத்த உணவுகளே ஏற்றவை.
உணவு நன்றாகச் சமைக்கப்படும்போது, நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை ஓரளவுக்கு உடலுக்குக் கிடைக்கும்.
எனினும், விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதலான நுண்ணூட்டச் சத்துக்கள் மிகக் குறைவாகவே கிடைக்கும். எனவே, பாதி பக்குவப்படுத்தபட்ட உணவுகள், சமைக்காத உணவுகள் போன்றவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
சமைத்து சாப்பிட வேண்டியவை
அரிசி, கோதுமை.
துவரை முதலான பருப்பு வகைகள் அனைத்தும்.
வேர்க்கடலை போன்ற தாமதமாகச் செரிமானமாகும் நட்ஸ் வகைகள்.
கீரைகள்
மீன், கோழி, ஆடு
முட்டை
பால்
கிரில்டு உணவுகள்
சூப், ரசம்
உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி.
பாதி பக்குவப்படுத்தி உண்ண வேண்டியவை
முளைகட்டிய பயறுகள்
பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள்
பனீர்
சீஸ்
வெண்ணெய்
தயிர்
அவல் பொரி
சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டியவை
காய்கறிகள்
பழங்கள்
தேன்
முந்திரி
உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள்
சாலட்