Author Topic: ~ செட்டி நாடு குருமா! ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ செட்டி நாடு குருமா! ~
« on: April 22, 2016, 11:02:45 AM »
செட்டி நாடு குருமா!



தேவையானவை:

 கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல்.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

 முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
இட்லி,தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.