Author Topic: ஒரு விரும்புதலுக்காக  (Read 377 times)

Offline thamilan

ஒரு விரும்புதலுக்காக
« on: April 20, 2016, 07:56:05 PM »
கல்லறை நோக்கிய ஒரு பயணம்
இரு கண்கள் நடத்தும்
அமைதி ஊர்வலம்
இளைப்பாறும் நேரத்தில்
இதயம் கொண்டுவரும் இரங்கல்  தீர்மானம்
மனம் அனுஷ்டிக்கும்
ஒரு நிமிட மெளன அஞ்சலி

இறுதியாக
கண்ணீரால் நிரப்பப்பட்ட பேனாவின்
கவிதை அழுகுரல்
ஒரு பேனாவின்
கண்ணீர் அஞ்சலி

விடுதலைக்காக அல்ல ஒரு
விரும்புதலுக்காக