Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ உதட்டின் அழகை பாதுகாக்க ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ உதட்டின் அழகை பாதுகாக்க ~ (Read 367 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226727
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ உதட்டின் அழகை பாதுகாக்க ~
«
on:
April 19, 2016, 10:35:07 PM »
உதட்டின் அழகை பாதுகாக்க
வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
விட்டமின்கள் குறைபாட்டினால், சிலருக்கு உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம்.
அதற்கு அவர்கள் உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, விட்டமின், “இ”´ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை”´ தடவி வரலாம்.
அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். இதற்கு பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து படிப்படியாக சிவந்த நிறமாக மாறும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி அதன் தழும்புகள் மாறி உதடுகள் மென்மையாகும்.
சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை. கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால் அழகாக இருக்கும். மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.
மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் பெற்று நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம். தரமில்லாத, காலாவதியான மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.
உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ உதட்டின் அழகை பாதுகாக்க ~