புளி இல்லாக் குழம்பு
தேவையானவை:
சின்ன வெங்காயம் 10, தக்காளி 2, பூண்டு 2 பல். அரைக்க: சாம்பார்பொடி ஒன்றரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) 2, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, எண்ணெய் 3 டீஸ்பூன், மல்லித்தழை சிறிது.
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். இரண்டரை கப் தண்ணீரில் அரைத்த விழுதைக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, கரைத்துவைத்திருக்கும் கலவையை ஊற்றி, நசுக்கிய பூண்டைப் போட்டு, கொதித்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும். வித்தியாசமான ருசி தரும் இந்தக் குழம்பு, சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது.