பவியின் கிறுக்கல்கள்
தலை கவிழ்ந்து என் கைகளை,
கொண்டு காதை இறுக மூடிக்கொண்டு
கண் திறவாமல் பயத்தில் உறைந்த நிலையில்
நான் இருக்க .அலறுகிறான் ராம் ....
பவிமா பேய் வந்துடுச்சி
ஆட்டம் ஆடும் போது எக்காரணம்
கொண்டும் கை எடுத்து விடாதே ராம்
அரற்றுகிறான் உசேன் ..
ஒற்றை கண்ணை மூடி ஒற்றை கண்ணால்
பெண் பேய் வருமா என்ற பீதியில்
அவர்களின் அருகே பேட்மண் ....
நண்பி கண்ணை திற
பேய்யும் இல்லை மண்ணும் இல்லை
இங்க வா என்று கூறுகிறான் என் நண்பன்...
நீ வந்துட்டியா இனி பயம் இல்லை என்று
என் நண்பனை நோக்கி நான்
பயத்தோடு ஓட பவி போகாதே
அது உன் நண்பன் ரூபத்தில் இருக்கும்
பேய் என்றான் உசேன்....
அடங்க வெங்காயம் ஏன்யா
இப்படி நன்பிய பயம் காட்டறீங்க
என்று கூற இது என் நண்பன் தான்
வெங்காயத்தை பெரியாருக்கு அடுத்து அதிகம் திட்ட
பயன்படுத்தியது என் நண்பன் தான் ....
பயத்தோடு ஓடி என் நண்பன் பின்னால் நான் பதுங்க
என் கனவு கலைந்து எனக்குள் எழுந்த ஒரே சந்தேகம்
ராம் உசேன் பேட் என்ன ஆகி இருப்பார்கள் ?