Author Topic: ~ கோவைக்காய் ப்ரை ~  (Read 1970 times)

Offline MysteRy

~ கோவைக்காய் ப்ரை ~
« on: April 01, 2016, 09:45:22 PM »
கோவைக்காய் ப்ரை



தேவையான பொருட்கள்:

 கோவைக்காய் – 250 கிராம் சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் கோவைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, பின் அவற்றை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின் அதில் கோவைக்காயை சேர்த்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் கோவைக்காய் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் தீயை குறைத்து, 15-18 நிமிடம் கோவைக்காய் ஓரளவு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து, பின் அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கோவைக்காய் ப்ரை ரெடி!!!